Wednesday 17 March 2021

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்

ஒவ்வொரு குழந்தையையும் 

நேசிப்போம் 


ஜேனஸ் சோர்ச்சாக்

தமிழில் தி.தனபால் 


இப்புத்தகத்தை எழுதியவர் சான்ட்ரா சப்

வார்த்தைகள் அத்தனையும் ஜேனஸ் சோர்ச்சாக் கூறியது .



ஜேனஸ் சோர்ச்சாக் : இவர் கல்வியாளர் , மருத்துவர் என பன்முகம் கொண்டவர் .குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் இல்லம் துவங்கி வேறெங்கும் இல்லாத அளவிற்கு குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் அசாத்திய திறன் பெற்றவராக விளங்கினார். போலந்தில்  புகழ் பெற்ற புத்தகமாக இவர் குழந்தைகளுக்காக எழுதிய King Matt The First என்ற புத்தகம் .குழந்தைகளால்  குழந்தைகளுக்காக நடத்திய லிட்டில் ரிவியு என்ற வாராந்திரப் பத்திரிகை சோர்ச்சாக்கின் புதிய முயற்சி. 1942 ஆகஸ்ட் 5 ஆம் நாள்  கோர்ச்சாக் மற்றும் அவரது இல்லத்தின் 200 குழந்தைகளின் மரணத்துக்கான ஊர்வலம் காவியமானது என்பது  வரலாறு .


மொழிபெயர்ப்பாளர் : தி.தனபால்

குறிச்சியில் இயங்கும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் (ஐ.பி.இ.எ. பள்ளி) பொறுப்பில் இருக்கிறார். 


குழந்தைகளைப்  பற்றிய புத்தகம் என்றாலும் ஒவ்வொருவரையும் குழந்தையாக உணர வைக்கிறது புத்தகம் இருபத்தியொரு தலைப்பில் குழந்தைகளைக் குழந்தைகளாகப் புரிந்து கொள்ள கற்றுத் தருகிறது. 


குழந்தைகளை மதிக்க வேண்டியதையும் அவர்களின் குரலைக் காது கொடுத்துக் கேட்க வேண்டியதையும் அவர்களை கவனிக்க வேண்டியதையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் கோர்ச் சாக்.


குழந்தைகளை உற்று நோக்குவது தான் பெற்றோரின் தலையாய கடமை என்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும் போதும் நமது குழந்தைப் பருவ நாட்கள் நினைவுக்கு வருகின்றன. நமது வீட்டுக் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் நம் கண்களுக்குள்  கொண்டு வந்து மூளை செல்களுக்குள் பதிய வைக்கிறது புத்தகம் . குழந்தைகளைக் கவனிக்க மறந்து போன படிநிலைகளை நினைவூட்டும் வரிகளாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன.  குழந்தைகளை நேசிக்க மீண்டும் ஒரு முறை கற்றுத் தருகிறது இப்புத்தகம் . நல்லதொரு புத்தகம் . 






No comments:

Post a Comment