Wednesday 17 March 2021

பாவம் இவனொரு பூனை குட்டிக்காரன்

பாவம் இவனொரு பூனை குட்டிக்காரன்


நூலாசிரியர  : ஆர். ஷாஜஹான்

 (பிறப்பு : 1956)


இவர் பிறந்தது தமிழகத்தின்  தாராபுரம் , உடுமலை அருகே மடத்துக்குளம் என்ற கிராமத்தில் வளர்ந்து 1991 முதல் தில்லியில் வசித்து வருகிறார் . பதிப்பாளர்களுக்கு நூல்களை வடிவமைப்பதும் மொழியாக்கமும் செய்து வருகிறார். இவர் புதியவன் என்ற பெயரில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி வருபவர். தில்லி தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை பத்தாண்டுகள் வகித்துள்ளார். சில காலம் தில்லியில் பத்திரிகை நிருபராகவும் பணியாற்றியுள்ளார். நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஏராளமான நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். வானொலி நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார் .ஷிவ் கேரா எழுதிய living with Honour என்ற நூலை மேக் மில்லன் பதிப்பகத்திற்காக 'வாழ்வாங்கு வாழ்தல்' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார். சக்கரக் காலன் அல்லது பயணக் காதலன் , இது மடத்துக் குளத்து மீனு …., அவசியம் தானா ஆறாம் விரல் ?மார்பகப் புற்றுநோய் , அறிந்ததும் அறியாததும் ஆகிய நூல்களை எழுதியுள்ளார் . அரசியல் , வரலாறு , மொழி , சமூகம் முதலான விஷயங்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார் . பேஸ்புக் வழியாகத்தான் எனக்கு இவர் அறிமுகம் . இவரை வாப்பா என்று தான் வாஞ்சையுடன் அழைப்பேன்.  ஏராளமான ஏழை மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணங்களை நண்பர்கள் உதவியுடன் செய்து வருகிறார். பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகைகளில் உதவி செய்து வருகிறார். 


புத்தகம் குறித்து 


வளர்ப்புப் பிராணிகளில் ஆர்வம் இல்லாதவரான  ஷாஜஹான் , எப்படி தனது வீட்டில் பூனைக்குட்டிகளை வளர்க்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்  என்பதும் அதற்காக குட்டிகளின் தாயாக வே அவர்  மாறிவிட்ட அனுபவங்களையே புத்தகம் தருகிறது. தங்கள் வீட்டில் மீன் வளர்ப்பு , கிளி வளர்ப்பு குறித்த அனுபவங்களையும் ஆரம்ப நிலையில் அழகாகப் பதிவு செய்துள்ளார். அட்டைப் படத்தைப் பார்க்கும் போதேநமக்கு இவரது பூனைகள் பற்றி புரிய ஆரம்பித்துவிடுகிறது. வழக்கமான பூனைகளாக இல்லாமல் பிறந்து இரு தினங்கள் கூட ஆகாத குட்டிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஏற்பது தான் இப்புத்தகத்தின் அடிப்படை . தாய்ப் பூனை விட்டுச் சென்று விட கண்ணும் கருத்துமாக அவற்றைப் பார்த்துப் பார்த்து பாலூட்டுகிறார் . அதற்குள் அவை இரண்டுக்கும்  ஏற்படும் உடல் பிரச்சனைகளுக்காக மருத்துவமனை செல்லுதல் , இரு பூனைகளையும் பாதுகாத்தல் என பம்பரமாக ஷாஜி வேலை செய்தது , அவற்றைக் கவனிக்க எடுத்த முயற்சிகள் என அனைத்தும் கண் முன்னே விரிகின்றன. 


பத்து நாட்களில் கண் விழிக்காத போதும் அவை இரண்டும் இறந்து விட , நமது மனமும் கண்களும் கலங்குகின்றன . பூனை குறித்த  ஏராளமான அறிவியல் வரலாற்றுத் தகவல்களைப்  புத்தகத்தில் நூலாசிரியர் தந்துள்ளார். 


எனது வீட்டில் கருப்பு நிற பூனை ஒன்று கடந்த ஒரு வருடமாக எனது மகள் வளர்த்து வருகிறார். 20 நாட்கள் முன்பு 2 குட்டிகளை அது ஈன்றுள்ளது. இன்று வரை 2 குட்டிகளையும் மிக அழகாக வளர்த்து வருகிறார் எனது மகள். இந்தப் புத்தகத்தில் தரப்பட்ட நூலாசிரியரது அனுபவங்கள் பெரும்பாலும் எங்களுக்கும் ஏற்பட்டவையே. ஒரு நாள் இரவு தாய்ப் பூனை குட்டிகளை விட்டு விட்டுச் சென்று விட எனது மகள் சென்னையிலிருந்து கொண்டு எனக்கு இரவு 1.45க்கு அலைபேசியில் அழைக்கிறார். குட்டிகள் பசிக்கு கத்துகிகின்றன. நான் இங்க் பில்லரை தான் எடுத்து பாலூட்டக் கூறினேன் .உண்மையிலேயே  கண் திறக்காத பூனைக் குட்டிகளைப் பார்த்துக் கொள்வது சவால் தான். 


No comments:

Post a Comment