Wednesday 17 March 2021

அறிவியல் நிறம் சிவப்பு

அறிவியல் நிறம் சிவப்பு 


எப்போதும் போல ஆயிஷா நடராஜன் நமக்குத் தந்துள்ள சுவாரஸ்யமான புத்தகம் .அதிகம் அறியப்படாத , பேசப்படாத முக்கியமான 15 அறிவியல் நூல்களைப் பற்றிப் பேசுகிறது புத்தகம் .


நீராவிக் கப்பலை நிலாவுக்கு அனுப்பியவர் , சிகரெட் பெட்டியை செல்ஃபோன் ஆக்கியவர் , புவி வெப்பமேற்றத்தைப் புரிய வைத்தவர் , இணையத்தை சைபர் ஸ்பேஸ் ஆக்கிக் கொடுத்தவர் ,மருத்துவ உலகின் மறுமலர்ச்சியை சாதித்தவர் , பேரண்டத்தின் வழிப் போக்கனும் 42 கண்டுபிடிப்புகளும் , உலகப் போராட்டங்களின் ரசவாதத்தைத் தொகுத்தவர் , வாசிப்பு எனும் அணுவுலையைப் பற்ற வைத்தவர் , அறிவியலை நம் தோழர் ஆக்கிய தோழர், அறிவியலின் நிறம் சிவப்பு , ஸ்பேஸூக்குப் போனார் காந்தி , அறிவியலே மறுபடியும் வெல்லும்  ,இந்த ஆண்டவரின் மன்றாட்டைக் கேட்டருளும் மானிடரே , நிராகரிக்கப்பட்டவர்களின் நிழல் வரலாறு , ட்ரம்ப் உடலும் லெனின் மூளையும்  , இப்படி 15 தலைப்புகளில் நூல்களை தமது எளிய மொழியில் தந்துள்ளார் ஆசிரியர் .


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 


வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

விலை ரூ 70

No comments:

Post a Comment