Thursday 18 March 2021

கற்பனை கடிதங்கள்

நூலாசிரியர் சுந்தரபுத்தன்


1997 இல் முதல் பதிப்பு வெளிவந்துள்ளது. இரண்டாவது பதிப்பாக பரிதி பதிப்பகம்  2014 இல் வெளியிட்டுள்ளது. இளம்பரிதி அவர்கள் தனது பதிப்புரையில் நூலாசிரியரைக் குறித்து எழுதிய வாக்கியங்கள் -தான் எழுதிய நூலின் ஒரு பிரதியைக் கூட தன்னிடம் பாதுகாத்து வைக்காத ஒருவர் சுந்தரபுத்தன். அதனால் என்ன? பாதுகாத்து வைக்கத்தான் நாமிருக்கிறோமே என்று குறிப்பிடுகிறார். 


சுந்தரபுத்தன்  திருவாரூர் மாவட்டத்தில் கண் கொடுத்தான் வணிகம் என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது 24 ஆம் வயது வரை சொந்த ஊரில் வாழ்ந்த இவர் அதன் பிறகு சென்னையில் இடம் பெயர்ந்து ,   பத்திரிக்கைத் துறையில் 

தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழரசி , புதிய பார்வை ,குமுதம் , வின் நாயகம் , புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல நிறுவனங்களில் பொறுப்பு வகித்துள்ளார். அதே போல வண்ணங்களின் வாழ்க்கை , ஒரு கிராமமும் சில மனிதர்களும் , கிராமத்து  ஆட்டோகிராப் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவர் தமிழரசி இதழில் எழுதிய கட்டுரைகள் தான் கற்பனைக் கடிதங்கள் என்ற முதல் நூலாக மாறியது. இவரது தந்தை ஒளிச்செங்கோ என்ற நடராஜன் மாலைமுரசு இதழில்  பணியாற்றிய புகழ் பெற்ற நிருபர் .


நூலைப் பற்றி ..


கடிதங்கள் என்றாலே உறவுப் பாலம் தான். இன்றைய அலைபேசி வருகைக்கு முன்பு , 90 கள் வரை கடிதப் போக்குவரத்து என்பது தான் மனிதர்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு ஆதாரமான கருவிகளாக  இருந்தன எனலாம். குடும்பத்தினரின் உறவுப் பாலம் , நண்பர்களின் உறவுப் பயணம் முதல் நாடுகளிடையே கூட உறவுகள் மேம்பட கடிதங்கள் தான் அச்சாரம் என்றாலும் மிகையாகாது. உலக இலக்கியங்களில் கடிதங்களுக்கென்று  முக்கியமான இடமுண்டு. எத்தனையோ கடிதங்கள் நாட்டின் முக்கிய வரலாற்றை மாற்றியிருக்கின்றன. 

சிறையிலிருந்து நேரு இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் , அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள் , காந்தியின் கடிதங்கள் , உடன்பிறப்புக்கு கலைஞருக்கு எழுதிய கடிதங்கள் ஆகியவை நம்மால் மறக்க முடியாத சில கடித வரலாறுகள். ஆப்பிரகாம் லிங்கன் தனது மகனின் தலைமையாசிரியருக்கு எழுதிய கடிதம் , பாடலாசிரியர்

 ந. முத்துக்குமார்  தன் மகனுக்கு எழுதி வைத்துச் சென்ற கடிதம் எனக் கூறிக் கொண்டே போகலாம் .


அந்த வகையில் இந்தக் கற்பனைக் கடிதங்கள் புத்தகம் நம் மனதை உற்சாகமாகவும் கற்பனா உலகத்திற்கு அழைத்துச் சென்றும் ரசிக்க வைக்கின்றன. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையின் எல்லாத் தரப்பு நினைவு களும் மனசைத் தொடும் உணர்வு வரும் என்பதில் ஐயமில்லை. 


நெல்சன் மண்டேலாவுக்கும் கூவம் நதிக்கும் கூட கடிதம் எழுதியுள்ளார் புத்தன் . தான் வாழ்ந்த கிராமம் தொடங்கி , கதை சொன்ன பாட்டிக்கும் நூலகருக்கும் அமைதிக்கும் பால்ய காலத்திற்கும் , சென்னைக்கும் , மொட்டை மாடிக்கும் வேலையில்லாப் பட்டதாரிக்கும் எனப் பலப்பல கிளைகளாக  விரிகின்றன கடிதங்கள் . 


அதே போல பாரதிராஜா , எம்.ஜி.ஆர் என பலருக்கும் கடிதங்களை எழுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். 


இப்புத்தகத்தில்  மொழி நடையில் ஒரு நளினமும் அழகுணர்ச்சியும் எதார்த்தமாக அமைந்துள்ள 


கற்பனைக்கேக் கூட ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது , தை மாதத்திற்கு , பள்ளிக்கூடத்திற்கு, தாழ்வு மனப்பான்மைக்கு என புத்தகத்தின்  ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும் போதும் கடிதங்கள் நம்மை மகிழ்ச்சியடையச்

சற்றே சிந்திக்கவும் வைக்கின்றன.


No comments:

Post a Comment