Wednesday 17 March 2021

பெட்ரோல் அரசியல்

பெட்ரோல் அரசியல்


ஆசிரியர் : வே.மீனாட்சி சுந்தரம் 


இது ஒரு விழிப்புணர்வு நூல் , பெட்ரோல் குறித்து பெரியதாக யாரும் யோசிக்கிறோமா என்றால் அன்றாட வேலைப் பளுவில் வாகனங்கள் நமக்கு இயங்க வேண்டும். எவ்வளவு விலை ஏறினாலும் நாம் சிறு புலம்பலுடன் நகர்ந்து விடுகிறோம். ஆனால் சற்றே நம்மை நிறுத்தி பல விதக் கேள்விகளை முன்வைக்கிறது புத்தகம் . பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த இயலாது என்று பொருளாதார நிபுணராக  இருக்கும்  பிரதமரே கூறுகிறாரே ?பெட்ரோலிய சந்தையில் விலை நிலவரத்தைத் தீர்மானிப்பது யார் ? பெட்ரோலிய சரக்கின் தர நிர்ணயித்திலும் அரசியலா ? சாதாரண சந்தைச் சரக்காக இருந்த பெட்ரோலியப் பொருட்கள் எப்போது இராணுவ அரசியல் சரக்காக மாறியது ? எப்போது இது நவீன தொழிலாகியது ? அதற்கு முன் என்ன ? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த நூல். 

No comments:

Post a Comment