Wednesday 17 March 2021

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்


அரிஸ்டாட்டில் 

(கி.மு.384 - கி.மு.322)


கிரேக்க தத்துவஞானம் அரிஸ்டாட்டலிலிருந்து தொடங்கியது அல்ல , சோஃபிஸ்டுகள் என்ற வகை அறிஞர்களிடமிருந்து துவங்கியது என்று வரலாறு கூறுகிறது. கிரேக்கத்தில் அந்தத் தேடலைத் தொடங்கி வைத்தவர் சாக்ரடீஸ் . அவரது மாணாக்கர்களில் முதலானவர் பிளாட்டோ , அங்கிருந்து தத்துவ ஞானத்தை இரு வேறு பாதைகளில் எடுத்துச் சென்ற இருவரில் ஒருவர் பிதாகரஸ் மற்றொருவர் அரிஸ்டாட்டில் . பண்டைய உலகின் தலை சிறந்த தத்துவஞானியாகவும் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் அரிஸ்டாட்டில் . தத்துவத்தின் அனைத்துத் துறைகளையும் வளப்படுத்தி அறிவியலுக்கு அளவிறந்த அருந்தொண்டுகள் புரிந்துள்ளார். மாசிடோனியாவிலிருந்த ஸ்டாகிரா நகரில் கி.மு.384 இல் பிறந்த அரிஸ்டாட்டில் தனது 17 வது வாதில் ஏதென்ஸ் நகருக்குச் சென்று பிளேட்டோவின் கல்விக் கழகத்தில் சேருகிறார். உலக வரலாற்றின் மகா அலெக்சாந்தருக்கு ஆசிரியராக அரிஸ்டாட்டில்  பல ஆண்டுகள் இருந்துள்ளார். ஏதென்சில் லைசியம் அல்லது உலாப் பள்ளி  என்ற பள்ளியை நிறுவி மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்துள்ளார். அரிஸ்டாட்டில் எழுதிக் குவித்த நூல்கள் 170 என வரலாறு கூறுகிறது. வானியல், விலங்கியல் , கருவியல் , புவியியல் , நில உட்கூறியல் , இயற்பியல் , உடல் உட்கூறியல் , உடலியல் என ஏராளமான துறைகளில் அரிஸ்டாட்டில் எழுதியுள்ளார். நமது பள்ளிக் கல்வி முறை தான் அரிஸ்டாட்டலின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச் சிறந்தது என்கிறார் ஆயிஷா நடராஜன் . 


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 

அறிவியலே வெல்லும் ,

உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த போது .. சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராகப் போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால்  உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில்  ஆல்பெர்ட்

 ஐன்ஸ்டீன், அரிஸ்டாட்டில்  ,எர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு , ஜான் டால்ட்டன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதை விட சாதிய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும் , சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும் என்கிறார் ஆயிஷா இரா. நடராசன்

No comments:

Post a Comment