Wednesday 17 March 2021

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் (1879 - 1955

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 

அறிவியலே வெல்லும் ,

உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த போது .. சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராகப் போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால்  உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில்  ஆல்பெர்ட்

 ஐன்ஸ்டீன், அரிஸ்டாட்டில்  ,எர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு , ஜான் டால்ட்டன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதை விட சாதிய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும் , சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும் என்கிறார் ஆயிஷா இரா. நடராசன் .


ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் (1879 - 1955)


அறிவியல் விஞ்ஞானி என்று சொன்னவுடன் நம்மில் பெரும்பாலோர் கண் முன் வருபவர் ஐன்ஸ்டீன் தான் என்றால் மிகையாகாது. நவீன அறிவியலின் இரண்டு தூண்கள் என்று வர்ணிக்கப்படும் சார்புத் தத்துவத்தையும் குவாண்ட இயந்திரவியலையும் அளித்தவர் இவரே. இவர் உலகக் குடிமகன் என்றே தன்னை அழைத்துக் கொண்டிருக்கிறார். ஐந்து வயது வரை பேசாத குழந்தையாக  இருந்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் வயதில் பித்தாகரஸ் தேற்றத்திற்குத் தானாகவே சொந்தமாக ஒரு நிரூபணம் எழுதிய திறன் மிக்கவர் . ஓய்வு நேரத்தில் தான் அற்புதமாய் உலகையே மாற்றிய பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி அறிவித்தார். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் .E = MC * 2 பற்றி எல்லோரும் அறிவோம். இது ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை முடிவுகளில் ஒன்று .அவரைக் குறித்து மிக விளக்கமாக பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள  ஆர்வமூட்டியாக இப்புத்தகத்தைப் பார்க்கலாம் .



No comments:

Post a Comment