Wednesday 17 March 2021

ரோஸ்

ரோஸ் 


ஆயிஷா படித்திருப்போம். அதைப் போல கல்வி முறையை அடிப்படையாகக் கொண்ட கதை தான் ரோஸ். இன்றைய கல்வி முறை யதார்த்தத்தை முன் வைக்கிறது ரோஸ். கேள்விகளை விரும்பாத , தேடலை மறந்த வாழ்க்கைச் சூழல் இவற்றின் மத்தியில அறிவுசார் தேடல் உள்ள ஒரு குழந்தையின் பரிதாபம் இதன் அடிப்படை தான் ரோஸ் .22 பகுதிகளாக ஒரு குட்டி நாவல் , வீடு , பாடம் , கல்வி முறை , குழந்தை உளவியல் என மையக் கருத்துகளின் அடர்த்தி இவர் எழுதும் சிறு சிறு புத்தகங்களுக்குள் வெளிச்சக் கீற்றுகள் ... ஆயிஷா ,ஒரு தோழியின் கதை , மலர் அல்ஜீப்ரா போல வந்தே மாதரம் போல ரோஸ் மிகவும் நல்ல புத்தகம் .


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 


வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ 50

No comments:

Post a Comment