Wednesday, 17 March 2021

அறிவியல் துளிகளில் கதைகள்

அறிவியல் துளிகளில் கதைகள் 

ஆசிரியர் : லூர்து எஸ் ராஜ் 


பதிப்பு :பாரதி புத்தகாலயம்

விலை = ரூ 50


35 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்து ஓய்வு பெற்றவர். மாணவர் மற்றும் சிறுவர்களுக்காக 60 நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட பாடப் புத்தகத்திலும் இவர் எழுதிய கதைகள் இடம் பெற்றுள்ளன. அறிவியல் செய்திகளை மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் முகமாக சுமார் 200 அறிவியல் சிறுகதைகள்  எழுதியுள்ளார். 


15 தலைப்புகளில் கதைகள் ரொம்ப அழகா மாணவர்களுக்குப் புரியும்படி எழுதியுள்ளார். ஒவ்வொரு கதையும் வகுப்பறை நிகழ்வு , பள்ளி , கற்றல் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் தொடர்பு படுத்தப்பட்டு  மிக எதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது.


 பள்ளிக் குழந்தைகளுக்கு மிகவும் சரியான புத்தகம் இது. பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு  கதைகள் சொல்வதற்காக பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட இதைப் படிக்கலாம். மிகவும் நல்ல புத்தகம் . 




No comments:

Post a Comment