Wednesday 17 March 2021

வந்தே மாதரம்

வந்தே - மாதரம் 

அறிவியல் - நெடுங்கதை


வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ 60


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 


ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் நவீன அறிவியல் உத்திகளோடு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நம் மண்ணை ஆக்கிரமிக்கத் துடிக்கும் போது இந்த மண்ணின் அறிவியல் ஆற்றல் மிக்க குழந்தைகள் மாறனின் தலைமையில் நடத்தும் மெய்சிலிர்க்க வைக்கும் போராட்டம் .காலப் பயணம் உட்பட அறிவியலின் நுணுக்கங்களை இவ்வளவு சுவையாக தேசப் பற்றுடன் கலந்து கொடுக்க முடியுமா என வியக்க வைக்கும் நூல். அறிவியலை நீண்ட கதையாக மிக சுவரஸ்யமாக 14 அத்யாயங்களாகத் தந்துள்ளார் நூலாசிரியர். வந்தே - மாதரம் எனும் சுய திட்டத்தை புதிய வகை மின் தயாரிப்பிற்காக உருவாக்கும் ஒரு தருணத்தை இறுதி அத்யாயமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது நூல்.


மலர் அல்ஜீப்ரா நாவலில் தந்த கணக்கு சுவாரஸ்யம் போல இந்த வந்தே மாதரம் தேசப் பற்றைத் தருகின்ற ஒரு நூலாக இருக்கிறது. 



No comments:

Post a Comment