Wednesday 17 March 2021

எப்படி வந்தேன் தெரியுமா ?

எப்படி வந்தேன் தெரியுமா ?


வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ 40


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 


தாளில் கருத்துகளை எழுதும் பேனாவின் கண்டுபிடிப்பு , கண்களின் பார்வைக் குறையை சரி செய்யும் மூக்குக் கண்ணாடி , எழுதியதை அழிக்க உதவும் ரப்பரின் வருகை இப்படியாக மெழுகுவர்த்தி , மேப் , பென்சில் , குக்கர் , சாக்பீஸ் , நோட்டுப் புத்தகம் , சாக்ஸ் , செய்தித் தாள் , ஷூ , குடை , கடிகாரம் சைக்கிள் வரை 15 சாதனங்கள் எப்படி இந்த உலகில் பயன்பாட்டுக்கு வந்தன என்ற அறிவியல் தொழில் நுட்ப உண்மைகள்  தான் இந்த 48 பக்கப் புத்தகம் . சுட்டி விகடன் இதழில் தொடராக வந்து பல்லாயிரக்கணக்கான வாசகரது கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment