பெண்கள்
#######
பெண்கள் .....
அகிலத்தின் ஒரு பாதி
அஸ்திவாரம் ......
அழப் பிறந்தாலும் இவள்
ஆளப் பிறந்த வர்க்கம் ....
ஆம் ......
மனிதர்களை ஆள்கிறாள்
மாநிலங்களை ஆள்கிறாள்
மனிதம் படைக்க இயல்பாய்
மாநிலத்தில் படைக்கப்பட்டவள் ...
பெண் அன்பு வயப்படுகிறவள்
பெண் பண்பு வயப்படுகிறவள்
பெண் எப்போதும் ஒரு பேரழகு
பெண் என்பவள் வசப்படுத்துபவள்
பெண் ஒரு மகாசக்தி, பெரும் வலி
பெண் ஒரு சமுத்திரம்....
பெண்ணை வணங்கவும்
பெண்ணை தூஷிக்கவும்
பெண்ணைப் போற்றவும்
பெண்ணை இகழவும்
பெண்ணைக் கொண்டாடவும்
இங்கு... பழக்கமுண்டு ....