Wednesday 17 March 2021

ஜான் டால்ட்டன் (1766 - 1844)

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 

அறிவியலே வெல்லும் ,

உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த போது .. சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராகப் போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால்  உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில்  ஆல்பெர்ட்

 ஐன்ஸ்டீன், அரிஸ்டாட்டில்  ,எர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு , ஜான் டால்ட்டன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதை விட சாதிய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும் , சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும் என்கிறார் ஆயிஷா இரா. நடராசன் .


ஜான் டால்ட்டன் (1766 - 1844)


வேதித் தனிமங்களுக்கான அட்டவணையைத் தந்து பொருட்கள் அணுக்களால் ஆனவை என்ற உண்மையை நமக்குத் தந்தவர். 

ஜான் டால்டன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து கொண்டே அறிவியல் ஆய்வுகளை செவ்வனே செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். காற்று மண்டலங்களை ஆய்வு செய்யும் வானவியலாளராகவும் திகழ்ந்துள்ளார். வறுமையில் தவித்த நெசவாளர் குடும்பத்தில் 1766 இல் பிறந்துள்ளார். இங்கிலாந்தில் பர்த்ஷா ஹால் எனும் மிகச் சிறிய கிராமத்தில் தனது கல்வியைத் துவங்கி , வறுமையின் காரணமாக 9 வயதில் தனது கல்வியை ஜான் டால்டன் கைவிட்டுள்ளார். ஆனால் 12 வது வயதில் உள்ளூர் பள்ளியில் ஆசிரியராகியதும் 14 வயதில் மிகக் கடினமான லத்தீன் மொழியில் வித்தகராக மாறியதும் குறிப்பிடத்தக்கது. வேதியியல்  துறையில் ஆர்வமுள்ள மாணவர்களும் , குழந்தைகளை ஊக்கப்படுத்தும் ஆசிரியர் பெற்றோர் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்  இது. 



No comments:

Post a Comment