Wednesday 17 March 2021

எர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு (1871-1937

உலகை மாற்றிய விஞ்ஞானிகள்


ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 


தமிழின் முன்னணிக் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர். சிறார்களுக்காக எளிய மொழியில் அறிவியல் மற்றும் அறிவியல் கதைகள் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்பட பல பரிசுகள் பெற்றவர். 

அறிவியலே வெல்லும் ,

உலகம் மூட நம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த போது .. சாதாரண மனிதர்களாகப் பிறந்து வறுமை மற்றும் கடும் ஆதிக்க எதிர்ப்புகளுக்கு எதிராகப் போராடியவர்கள் விஞ்ஞானிகள். தங்களது திருப்பு முனைக் கண்டுபிடிப்புகளால்  உலகை மாற்றிய மாமனிதர்கள் விஞ்ஞானிகள். அவர்களில்  ஆல்பெர்ட்

 ஐன்ஸ்டீன், அரிஸ்டாட்டில்  ,எர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு , ஜான் டால்ட்டன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அப்படிப்பட்ட அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைக் கொண்டாடுவது நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதை விட சாதிய மதவாத அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதைவிட அர்த்தமுள்ள சமூகச் செயல்பாடாகும். அது நம் புரிதலை உயர்த்தும் , சமூகத்தை மூட நம்பிக்கையில் இருந்து மீட்கும் என்கிறார் ஆயிஷா இரா. நடராசன் .


எர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு (1871-1937)


ஜான் டால்டனுக்குப் பிறகு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம்  கழித்து வந்தவர் ரூதர் ஃபோர்டு. அணுவியல் துறையை தோற்றுவித்த மாபெரும் விஞ்ஞானி இவர். நியூசிலாந்தைச் சேர்ந்தவர். அணுச் சிதைவு நடப்பதை நேரடி ஆய்வு செய்து உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். ஒவ்வொரு தனிமத்திற்கும் அதன் அணுவின் அமைப்பை வெளியிட்டு உலகையே தன் கவனத்திற்குக் கொண்டு வந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் தனது ஆழமான ஆய்வுகளால் உலகளவில் பல அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வரலாறு படைத்தவர் .






No comments:

Post a Comment