Friday 15 September 2017

மழை

                                         மழை
                                                                                      ******
                       மழை என்ற ஈரெழுத்துச் சொல்
                       மனித குல உயிர் நீராகுதே ....
                       மண்ணை ஈரமாக்கக் கூட இப்போ
                       மழை வருவதில்லையே ....
                       காட்டையும் கழனியையும் அழித்து
                       கானகம் ஆக்கியக் கதை  போதுமே 
                       மேற்கத்திய கலாச்சாரமும் 
                       மேலை நாட்டு நாகரிகமும்
                       உடையும் மனமும் திருடியதோடு
                       உண்ணும் உணவு விளையும்
                       உயிர்ப் பயிரையும் திருடிய
                       ஒவ்வாமை ...மண்ணைக் கெடுத்து
                       மழையையும் கெடுத்ததே ......
                       தன் நாடு சுகமாக வைத்தவன்
                       திட்டமிட்டு நம் நாட்டைத்
                       தொழில் அமைக்கக் காவு தந்தோமே....
                       சூழல் அனைத்தும் அவன் வசம்
                       சூன்யமாகியதே  நம் மனம்
                       கட்டும் ஆலைகள் காவு கேட்க
                       காட்டையும் மரங்களையும் .....
                       நாணம் இன்றியே நாம் தந்தோம்
                       நல்ல மேகமும் நம்மை விட்டு
                       நலிவடைந்த நாட்களே இன்று ....
                       எல்லாம் செழிக்க ....
                                                எமது மண்ணே காத்திரு
                       மழை தேவதை அருள் புரியும்

                       மகத்தான நாட்களுக்காக ......

மழைக்காலம்

                                மழைக்காலம்
                                                                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சீக்கிரம் இருள் வரும் காலம்
சில்வண்டுகள் ரீங்காரம்
ஆடு மாடு விலங்குகள்
அனைத்தும் நடுங்கும் காலம்
மரங்களுக்கு மகிழ்ச்சி காலம்
மண்வாசனை மெதுவாக நாசியில்
மணம் பரப்பும்  மழைக்காலம்
மனிதர்களும் நீருக்காக ஏங்கி வாழ
மனசாட்சி கொண்ட கருணைக் 
                                        காலம்....
மழைக்காலம் இது மழைக்காலம்

வாசிப்பை நேசிப்போம் ..... 5

                    வேர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம்

அறிவியல் தலைப்பில் சமூகக் கருத்துகள் நிரம்பிய மொழி ஆளுமை நிறைந்த ஒரு அழகான நூல் ........

தமிழ்ப் பட்டறைத் தலைவர் திரு சேக்கிழார் அப்பாசாமி அவர்களின் அணிந்துரை , கந்தகப் பூக்களின் யுவபாரதி அவர்களின் வாழ்த்துகள் என நூலின் தொடக்கம் சுவாரஸ்யமாக  அழைத்துச் செல்ல .....

உள்ளே .... 
 பக்கங்களைப் புரட்டினால் ..... ஐம்பதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் கவிதைகள் வேர்களாகத் துளிர் விட்டுப் பரவி இருக்கின்றன ...

நூலாசிரியர் கரூர் பூபா நாம் வாழும்  சமூகப் பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் வேர்களாகக் காண்கிறார் .

ஆம் வேர்கள் நில மண்ணில் பரவி ஆழ்ந்த பிடிப்புடன் இருப்பது போல.... 
சமூகம் என்னும் நிலத்தில் பிரச்சனைகள் என்ற வேர் ஆழமாக ஊன்றி வளர்ந்திருக்கின்றது .... என்ற கருத்து நூல் முழுவதும் விரவியிருப்பதைக் காணலாம்....

ஒவ்வொரு தலைப்பும் ஓர் வைரம் .... மிக மிக விலை மதிப்பற்றதாகக் காண்கிறேன்

என்னைத் தேடுகிறேன் .... எதையும் " பற்றி" என்னால் இருக்க முடியாது ....வரிகள் கவிஞனின் இயல்பாகப் பார்க்கிறேன்.

பெரும் வாழ்வில்  .... கடந்து விடத் தேவையாயிருக்கிறது ஏதேனுமொன்று என்ற போது ....எவ்வளவு உண்மையான வரிகள் என உணர்கிறேன்.

கருணை உணரும் தருணத்தின் பக்கங்கள் .... பல செய்திகளை எனக்குள் சொல்லிச் சென்றன ....

அநேகப் பொழுதுகளின் அநேக வார்த்தைகள்...... என்னுள் அநேகமாக 
ஆழமான தாக்கத்தைத் தந்தன .... என்றே கூறுவேன் .....பூபா

வக்கற்றவர்களின் தலைப்பு ..... வலி நிறைந்த பகுதியாக இருக்கிறது .

மரபு மறத்தல் ..... இதன் பிற்பாதி வரிகள் மனதை என்னவோ செய்கின்றன ..

நான் அறியும் ரகசியம் ....
யாரும் அறிந்திருக்கவில்லை
நான் நானாக இருக்குமா ... என்பதையும் ... மிக அழகான வரிகளாக உணர முடிந்தது .....

சுயமிழந்த குளங்கள் .....
குளம் இருந்ததற்கான அடையாளத்தினை தேடிக் கொண்டிருக்கிறேன் .. இந்த வரிகளில் நம் இன்றைய நீர்நிலைக் களுக்கு ஏற்பட்டு இருக்கும் ஆபத்தின் ஆழமும் வலியும் தெரிகிறது

வேஷங்களின் தலைப்பு
சாத்தான் உருவிலிருக்கும் சக மனிதரைத் தோலுரித்துக் காட்டுகிறது ...

மரங்களின் நேசக் குறிப்புகள் ..... உண்மையான நேசத்தை அடையாளப்படுத்த  அசோகனையும் புத்தனையும் துணைக்கழைத்து 
சுதையடுக்கும் சமயங்களிலாவது தெரிந்து கொள்ளுங்கள் நான் மரம் என்பதை .... 
இந்த வரிகள் நம்மை கண்ணீரோடு சிந்திக்க வைக்கின்றன ...

அரற்றும் பேய்கள் ....
நம் ஊரின் அதிகபட்ச மூட நம்பிக்கைகளின் இருப்பிடம் ... பக்கத்து வீட்டு அக்கா , பார்த்திராத அண்ணா.... இவர்களை நினைவுக்குக் கொண்டு வந்தது .....

திராணியற்று , இனியும் வேண்டாம் , கையறு நிலை, கவிதைக்காரன் , இந்நிலை என்று மாறுமோ .... என ஒவ்வொன்றையும்  கடந்து போக கண்களும் மனமும்  மறுக்கின்றன.

பிணம் மிதக்கும் நதி .... சம்மட்டியில் அறைகிறது. ...

எழுதும் ரகசியம் .... மிக அழகாக ஒரு மதிப்பீட்டுக் கவிதை ...

கடவுள் நிறைந்த தேசம் ... அன்றாட மனித மனங்களின் கடவுள் பயணத்தை எடுத்துக் காட்டுகிறது ....

வெற்று கோஷம் .... வாழ்க்கையின் முரண்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ...

இறந்தலுக்குப் பின் மாறி விடுகிறேன் நான் அச்சமூட்டும் பொண மாய் .. வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துக் கூறுகிறது. ...

குருதி இழந்தவர்கள் .... பெயர் எதையோ உணர்த்தி அச்சமூட்டுவதாக உள்ளது ....

ரகசியப் படுகுழிகள் .... எதையோ சொல்லிக் கொடுத்து விட்டு நகர்ந்தது.

இறந்த காலம் ......
என் வரலாற்றை யோசிக்க வைத்த ஒரு பகுதி ............ 

நாவின் ருசி ... சந்தர்ப்பங்களின் ருசியறிய ஆற்றல் தரும் வரிகள் ...

அகம் மூடிகளின் ...
அனுபவச் செறிவுகளும் உடையும் பிம்பங்களின் பிரம்மிப்பு மாயத் தோற்றமும் ... வக்கற்ற வாழ்வு தந்த வரிகளும் கூட வலிகளைத் தந்து செல்கின்றன ....

கூண்டுக் கிளிகளாய்.....
மிருகங்களின் சூட்சமம் அறிந்த அவன் புலியாய் மாறி விட்டான்  ..... ஆகச் சிறந்த உண்மை அல்லவா ...?

மீண்டும் வா பார தீ ...
ஒவ்வொரு வரியும் நிதர்சனம் ... ஆன்மா அழுகிறது ... மனம் வெம்புகிறது. ...

பிரத்யேகமாக ... வேர்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ....
இத்தலைப்பின் கீழ் 
..... தனித்தனி வரலாறு இருக்கிறது ...
.....பக்க  வேர்கள் வலியறியாது உண்டு கொழுத்து .... மிக அருமையானது .. அத்துனை வரிகளும்....

வாழ்வின் ருசியும் , விதிக்கப்பட்ட  விதியும் , தனித்துவமாகப்  பயணித்து .....
நான் யார் ? என்பதைப் புலப்படுத்தி ... தனித்த வாழ்வு...
இது .... அன்றேனும் உணர் மனிதனென .... என முடித்ததிலிருந்து ... நிஜம் சுடுகிறது .....

எங்க ஊருக்கு வராதிங்க .... இது அழகா ஊரின் இயல்பை , அடிப்படை வசதிகளுக்கும் மக்கள் படும் கஷ்டங்களும் வாழைப்பழத்தில்  ஊசியாகத் தந்திருப்பதும் ...
நீங்க இங்கே வாழ வர வேணாம் ... எப்படி வாழ்றோம்னு 
பாக்கவாவது வாங்க .. என முடித்திருப்பது வெகு அருமை

புரியாத புதிர்..... அஃறிணை யாரென்பது புரிந்தீர்களா ????ஆயிரம் சிந்தனைகளை ஒட்டு மொத்தமாகக்  கொடுத்தது எனக்கு ....

வாய் விற்பவர்களில் வரும் ....
பசுத்தோல் மூளைகள் என்ற சொற்கள் மிகப் பெரிய குற்றச்சாட்டு என எண்ணுகிறேன்.

பழமைத்தனத்தில்  ஒரு புதுமை இருக்கத்தான் செய்கிறது .....

வா தோழாவில் .... ஒவ்வொரு வரியும் உண்மை .... மனங்களை மாற்றி குணங்களைப் புதிதாக்கி ...... அருமை ..

தாராளமயமாக்கலில் ...... தொழிற்புரட்சி என தவறாய் உளறாதே .... எல்லாம் உலகமயம் ..... எவ்வளவு வெளிப்படையாகக் கூறியுள்ளார்  !!!!

இந்த கவிதைக்கு தலைப்பில்லை ...
எழுதப்படாமல் இருக்கின்றன இன்னும் பல கவிதைகள் ..... வரி
 செம

என் கனவு .... இதன் படக்காட்சி என்னுள் ஓடியது.

விந்தை மனிதர்கள் , வாக்குப் பொறுக்கிகள் .... அதிரடி வரிகள் .....

மாரியம்மன் திருவிழா வின் வரிகள் எனது பால்யத்திற்கு அழைத்துச் சென்றது .... 
அதன் இறுதி வரிகள் செம ...

சேலைக்காரியும் .. மிக ஆழமான அழகான வரிகள் .....

............ அப்பா ....... ஒரு வழியாகப் படித்ததை எழுதி முடித்து விட்டேன் ...
கவிஞரைப் பாராட்டிப்..... பேசுவதற்காக இல்லை இந்தப் பதிவு ....வரிகளை விட தலைப்புகளே என்னுள் அதிக தாக்கத்தைத் தந்தது பூபா ....
இது படிப்போர் அனைவரும் அவர்களைச் சுற்றியுள்ள நிகழ்ச்சிகளை உணர வைக்கும் புத்தகமாக இருக்கு .......

கோபம் சில இடங்களில் தெறித்தும் ,

சில பக்கங்களில் எள்ளி நகையாடியும் .....

சில தலைப்புகளில் குட்டு களாகவும்  வெளிப்படுகிறது
நிறைய எழுது பூபா .... வாழ்த்தும் மகிழ்ச்சியும் ...

ஆழமாப் போனதால இதை எழுத தாமதமாகிடுச்சு  ....