Wednesday 17 March 2021

கலிலீயோ

கலிலீயோ

அறிவியலில் ஒரு புரட்சி 


வெளியீடு : பாரதி புத்தகாலயம் 

விலை : ரூ 60


பேரா.வி. முருகன் 

இயற்பியல் பேராசிரியராகவும் , துறைத் தலைவராகவும் சென்னை , விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றியவர் . தற்போது சென்னை பல்கலைக் கழகத்தில் வருகை தரும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். குவாண்டம் இயங்கியல் ((Quantum Mechanics) குறித்த இவரது ஆங்கில நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கல்வி வளாகம் சார்ந்த அறிவியல் கல்வியைத் தாண்டி அறிவியல் பரப்பல் .அறிவியல் நோக்கு ஆகியவற்றுக்கும் பணியாற்றி வருபவர். பல்வேறு அறிவியல் உரைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருபவர் .


கலிலீயோ என்ன கண்டுபிடித்தார் அவரின் கண்டுபிடிப்புகள் ஏன் பல சர்ச்சைகளை அவர் காலத்தில் எழுப்பின?அவருடைய சாதனைகளும் வேதனைகளும் எப்படி பிற்காலத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவின என்று விரிவாக விளக்குவதுதான் இந்நூல். கலீலியோவின் வாழ்க்கை வரலாறு படிக்கும் அனைவருக்கும் நல்லதொரு அனுபவத்தைத் தருகிறது.

கலீலியோவின் சாதனைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் என்கிறார். ஒன்று வானவியல் சம்பந்தப்பட்டவை .

மற்றொன்று இயற்பியலில் முக்கியமாக இயக்கவியலில் பல சாதனைகளைப் படைத்தது. முதலில் கூறிய வானவியல் கண்டுபிடிப்பு குறித்து பேசுகிறது புத்தகம் . அரசியல் ரீதியாக கலிலீயோ அறிவியல் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து விரிவாகப் பேசுகிறது .

அறிவியல் துறையின் முக்கிய செய்திகளைத் தரும் நல்ல புத்தகம் . 

No comments:

Post a Comment