Monday 29 October 2018

Life

புள்ளிகளில் ஆரம்பமாகும் வாழ்க்கை ...
கோடுகளின் வழியிலே பயணித்து....
பல்வேறுஉருவங்களில் சங்கமிக்கிறது ...
வட்டப் பாதையில் இணையும் புள்ளிகள்
வடிவம் பெறும் அழகே தனி தான் ....
வேறொரு கோட்டில் பயணிக்கும் புள்ளிகள்
தொட்டுச் செல்லும் கோடுகளாய் வெட்டுகின்ற நேரங்களில் ....
தொடும் கோணங்களில் உருவாகும் வாழ்க்கை ...மற்றுமொரு பரிமாணம் ...

இவற்றுள் ...
மையப்புள்ளிகளாக சில உறவுகள் ..
வட்ட நாண்களாய் சில உறவுகள் ..
இணையான கோடுகளாய் சில உறவுகள் ..
மையக் குத்துக் கோடுகளாகக் கூட
மையம் செய்து காக்கும் உறவுகள் ..
சுற்று வட்ட மையமாக குடும்ப உறவுகள் ..
செங்குத்து உயரங்களாக சில வழித்துணைகள் ...
மூலை விட்டங்களின் முனைகளாக இருவரை  இணைக்கும்
நேர்க்கோட்டு உறவுகள் ..
பாகை மானிகளாக அளவிடும்
பகுக்கப்பட்ட உறவுகள் ...
சதுரமும் செவ்வகமும் நாற்கரமுமாக
இணைகரம் சாய்சதுரம்  எனக் கூறும்
இன்னும் சில உருவங்களான உறவுகள் ...
வாழ்க்கை ஒரு  வட்டமான கணக்குக்குள்
இன்னும் ஆய்விற்கு உட்பட்டே ..

உமா

Friday 12 October 2018

அன்பின் ....

எழுத்துகளால் நிரப்பப்பட்ட அன்பு
வார்த்தைகளின் சாயலில்
இலக்கணமில்லா  வாக்கியமாயிற்று .....

சாயலான வார்த்தைகளை நிறமற்ற தாள்களில் '
கூர்மையில்லா
எழுதுகோல்கள்  வரைகின்றன ....

ஒருவராலும் படித்துப் பொருள் கொள்ள இயலவில்லை ...

அன்பின்  எழுத்துகளை ...

Thursday 4 October 2018

Anbu

அன்பின் முடிவு ...

கிறுக்கல்களால் ஒவியமானது அந்த மனது....

ரணங்களால் நிறம் பெற்றன அந்த ஓவியங்கள்

துரோகங்கங்களால் நிரம்பி வழிந்தன அந்த ரணங்கள்...

ஏமாற்றங்களால் புடமிடப்பட்டன அந்த துரோகங்கள் ...

எதிர்பார்ப்புகளால்  பின்னப்பட்டன அந்த ஏமாற்றங்கள் ...

அன்பினால் சேமிக்கப்பட்டன அந்த எதிர்பார்ப்புகள் ....

அந்த அன்பின் விளைவுகளே கிறுக்கல்களாகிய கதை இதுவே ...

உமா