Wednesday, 12 December 2018

பித்து

வழிந்தோடும் பிரியங்களை சேகரிக்க
வழி தெரியாமல்
வலி கொள்ளும் நிமிடங்கள் ....
வேதனை மிகுந்தவை ..

அடைகாக்கும் கோழிக்கான
அந்த கதகதப்பை
புரிந்து கொள்ளும் வழிகளும்
புரிந்து விடாமல் ...

எதார்த்தத்தை மட்டுமே
எண்ணிக் கொண்டு
ஓடும் ஒட்டங்கள்
ஒரு வித அதிர்வின்
ஒவ்வாமையாகிவிட

கடக்கத் தெரியாமல்
கடக்கும் நொடிகள்
வேதனை என்று
சொல்லித் தெரிவதில்லை

No comments:

Post a Comment