பெண் குழந்தைகளுக்கு ஒரு நாள் மட்டுமே நம்மால் வாழ்த்துகள் சொல்ல முடிகிறது .
ஓடி ஆடி குதூகலித்து சிரித்து வாழும் குழந்தைகள் எல்லாவற்றிலும் சுருங்கிப் போகும் படி சட்டென ஒரு நேரத்தில் எல்லாவற்றிற்கும் தடை விதித்து விடுகிறது வீடும் சமூகமும் ..
உனக்கு பசிச்சாலும் உடனே சாப்பிடக் கூடாது... அதுக்கு ரூல்ஸ்
உனக்கு பிடிச்சாலும் எல்லாத்தையும் செய்திடக் கூடாது ... அதுக்கு ரூல்ஸ்
உனக்கு சரி என்று தோன்றினாலும் அதையெல்லாம் பண்ணிடக் கூடாது ... அதுக்கு ஒரு ரூல்ஸ்
பெண் குழந்தைகள் இப்படியாக சிறிகொடிக்கப்பட்டு பெண்களாக வளர்ந்து வில்லிகளாக உருவகப்படுத்தப்பட்டு இயல்பு மாறிவிடாமல் ....
தன் குழந்தைத் தன்மையை இழக்காமல் மலர்ந்த எண்ணங்களால் புன்னகை மகிழ்ச்சி மாறாமல் , அதே சமயம் சூழலை வெல்லும் உறுதியுடைய தைரியப் பெண்களாக வளர என்னோடு பயணம் செய்யும் அத்தனைப் பெண் குழந்தைகளையும் நான் சந்திக்காத மற்ற அனைத்துப் பெண்களையும் , பெரிய பெண் குழந்தைகளையும் தேசியப் பெண்கள் குழந்தைகள் தினமான இந்நாளில்
வாழ்த்துகிறேன்.
எப்போதும் சிரித்திருங்கள்
Never Cry - Always Smile
உமா